யாழில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்ற இரா.சாணக்கியன்
தீவுச்சேனையில் இருந்த முகாமில் கடத்தி செல்லப்பட்டவர்கள் படுகொலைசெய்யப்பட்டதான தகவல்கள் உள்ள நிலையில் இவை தொடர்பிலான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்வதன் மூலம் உண்மைகள் வெளிக்கொணரமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு சித்தாண்டியில் 11வது நாளாகவும் போராடிவரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது […]













