உலகம் செய்தி

அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு – துப்பாக்கிதாரி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்

  • December 16, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரில் ஒருவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சஜித் அக்ரம், தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என அங்குள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த சஜித் அக்ரம், அதற்குப் பிறகு ஆறு முறை மட்டுமே இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருடன் அவர் குறைந்த தொடர்பே […]

செய்தி விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பத்திரன மற்றும் நிஸ்ஸங்க

  • December 16, 2025
  • 0 Comments

அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19வது இந்தியன் பிரீமியர் லீக்(IPL) கிரிக்கெட் போட்டிக்கான சிறிய ஏலம் அபுதாபியில்(Abu Dhabi) தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சிறிய ஏலத்தில் இலங்கையை சேர்ந்த இரு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன(Matheesa Pathirana) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders) அணியால் 18 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) அணிக்காக விளையாடிய பத்திரன […]

ஐரோப்பா

போலந்தில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த ஆயத்தமாகிய இளைஞர் கைது!

  • December 16, 2025
  • 0 Comments

போலந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும்  பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கிறிஸ்துமஸ் சந்தையில்  தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 19 வயதான மேடியூஸ் (Mateusz)  என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் கிழக்கு போலந்தின் லுப்ளினில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அவரை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் இருந்து இஸ்லாம் தொடர்பான பொருட்கள்” பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். லுப்ளின் கத்தோலிக்க பல்கலைக்கழக […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் முகாமைத்துவத்துக்கு தனி அமைச்சு கோருகிறார் சஜித்!

  • December 16, 2025
  • 0 Comments

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள தனியானதொரு அமைச்சு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் இன்று இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சென்றிருந்தவேளை ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்ககூடிய வகையில் எமது நாட்டில் நேர்த்தியான பொறிமுறையொன்று எமது நாட்டில் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். எனவே, மீண்டுமொரு பேரிடர் ஏற்படுவதற்கு முன்னர் […]

உலகம் செய்தி

ஈரானில் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து – 13 பேர் பலி!

  • December 16, 2025
  • 0 Comments

ஈரான் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று இஸ்ஃபஹானில் (Isfahan) இருந்து வடகிழக்கு நகரமான மஷாத் (Mashhad) நோக்கிச் சென்ற பேருந்து தண்டவாளத்தில் மோதி, பின்னர் எதிரே வந்த டாக்ஸியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 11 பேருந்து பயணிகளும் டாக்ஸியில் பயணித்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்புப் பிரிவுகள் […]

ஐரோப்பா

பிரான்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு – 02 சிறுவர்கள் பலி!

  • December 16, 2025
  • 0 Comments

பிரான்சின் ட்ரெவோக்ஸில் (Trévoux) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியொன்றில் எரிவாயு கசிவு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 03, 05 வயதுடைய 02 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எரிவாயு வெடித்ததே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அக்கட்டிடத்தில் வசித்து வந்த 70 குடும்பங்களும், அதன் அருகில் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களும் […]

இலங்கை செய்தி

இந்திய மருத்துவக் குழு தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து இந்தியா பயணமானது

  • December 16, 2025
  • 0 Comments

இந்திய மருத்துவக் குழு தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து இந்தியா பயணமானது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் தனது மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து நேற்று முன்தினம் (14) இந்தியா திரும்பியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் இந்திய குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை ரீதியான பங்களிப்பு தொடர்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழு நாடு திரும்பிய நிலையில் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடருக்கு மத்தியிலும் புலிப்புராணம் பாடும் விமல்!

  • December 16, 2025
  • 0 Comments

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு அமெரிக்கா வழங்கிவரும் உதவிகளின் பின்னணியில் வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கக்கூடும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றுவரும் சர்வதேச உதவிகள் தொடர்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு, “அநுரகுமார திஸாநாயக்கவால்தான் இலங்கையை மீட்டெடுக்க முடியும் என அமெரிக்க இராஜதந்திரிகள் நற்சான்றிதழ் […]

செய்தி

மீள் கட்டமைப்பு நிதிக்கு ஹட்டன் நேஷனல் வங்கி பெருந்தொகை நிதி உதவி

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கை மீள் கட்டமைப்பு நிதியகம் (Rebuilding Sri Lanka’) நிதியத்திற்கு  ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National) வங்கி 100 மில்லியன் ரூபா நன்கொடை டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘இலங்கை மீள் கட்டமைப்பு  (Rebuilding Sri Lanka’) ’ நிதியத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தொடர்ந்து நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில், ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton […]

உலகம் செய்தி

போண்டி துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்தாரி இந்தியாவை சேர்ந்தவரா?

  • December 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி சஜித் அக்ரம் (Sajid Akram) இந்தியாவைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் அவரின் குடும்பத்தினர் வசித்து வருவதாக  கூறப்படுகிறது. ஆனால் ஹைதராபாத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருடன் சஜித் அக்ரமிற்கு குறைந்த தொடர்பே இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஏறக்குறைய 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரிகளில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மற்றைய நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் […]

error: Content is protected !!