பொழுதுபோக்கு

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனருக்கு டும்.. டும்.. டும்

  • October 31, 2025
  • 0 Comments

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் பாராட்டையும் பெற்றார் அபிஷன். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போதே, மேடையில் தனது நீண்ட நாள் காதலியான அகிலாவிடம் திருமணம் செய்ய சம்மதமா? என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் போர் – புட்டின் மற்றும் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு நிறுத்தம்!

  • October 31, 2025
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் (Donald Trump) ஆகியோரத்து திட்டமிட்ட சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் புடாபெஸ்டில் (Budapest) சந்திப்பார்கள் என முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு வந்துள்ளது. போர் நிறுத்த நிபந்தனைகளின் ஒரு பகுதியாக உக்ரைன் கூடுதல் பிரதேசத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மொஸ்கோ வலியுயுறுத்தி வருகிறது. பிராந்திய சலுகைகள், உக்ரைனின் ஆயுதப் படைகளில் கூர்மையான குறைப்பு மற்றும் உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் […]

இலங்கை

வத்தளையில் 3 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

  • October 31, 2025
  • 0 Comments

சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்களை வத்தவளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய வேலைத்திட்டத்துக்கமைய வத்தளை, அவரக்கொட்டுவ பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் ஏனைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள், பாதாள குழு உறுப்பினர் கெஹேல் பத்தர பத்மேவின் போதைப்பொருள் வியாபார வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என […]

இலங்கை செய்தி

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

  • October 31, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு  பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம்  இன்று  உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, சந்தேக நபரை 50000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். […]

பொழுதுபோக்கு

புதுமுக இயக்குனருடன் இணையும் விக்ரம் : சியான் 63 அப்டேட்

  • October 31, 2025
  • 0 Comments

விக்ரமின் 63 ஆவது படத்தை அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரமின் அடுத்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது, தொடர்ந்து இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி பின் இந்த இரு படங்களும் கைவிடப்பட்டன. இப்படியான நிலையில் விக்ரமின் 63ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் விக்ரமின் 63 ஆவது படத்தை இயக்கவிருப்பதாக […]

உலகம்

எல்லை மோதல்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

  • October 31, 2025
  • 0 Comments

எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான மோதல்களால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான பதற்றத்தைக் குறைக்க, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன. முன்னதாக, துருக்கி (Türkiye) மற்றும் கத்தார் (Qatar) ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் வகித்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் பயனற்று முடிவடைந்ததாக பாகிஸ்தான் நேற்று முன்தினம் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த புதிய முயற்சி உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் நடந்த ராணுவ மோதல்கள், டஜன் […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் 142 ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாத தேவாலயம்!

  • October 31, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் உள்ள சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família)  உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறியுள்ளது. சிலுவையின் முதல் பகுதி பார்சிலோனாவில் கட்டுமானத்தில் உள்ள மைய கட்டிடத்தின் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தேவாலயத்தின் தற்போதைய உயரம் 162.91 மீட்டராகும். இதன் மூலம், 135 ஆண்டுகளாக (1890 முதல்) உலகின் மிக உயரமான தேவாலயமாக இருந்த ஜெர்மனியில் உள்ள உல்ம் மினிஸ்டரின் (Ulm Minster)  சாதனை அதிகாரப்பூர்வமாக முறியடிக்கப்பட்டுள்ளது. சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família)  தேவாலயம் உலகின் மிகப்பெரிய […]

இந்தியா

தவெக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

  • October 31, 2025
  • 0 Comments

பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. நேற்றிரவு மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் (Email) மூலமாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடனேயே, காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்பட்டு, அடுத்த அரை மணி நேரத்திற்குள் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளுடன் TVK அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது, […]

உலகம் செய்தி

காடுகளில் இயற்கையாகவே உருவாகும் கொரோனா வைரஸ் – மனிதர்களுக்கு ஆபத்தா?

  • October 31, 2025
  • 0 Comments

தென் அமெரிக்காவில் வௌவால்களில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது கொரோனா தொற்றுநோய்க்கு காரணமான வௌவால்களை மிகவும் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜப்பானிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வடக்கு பிரேசிலில் வௌவால்களின் எண்ணிக்கையை ஆராய்ச்சி செய்தபோது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பீட்டாகொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த BRZ batCoV என்ற வைரஸைக் கண்டறிந்துள்ளனர். மனிதர்களுக்கு பரவியமை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும்  வௌவால்களிடமிருந்து மக்களுக்கு வைரஸ் பரவும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் […]

இலங்கை

இலங்கையில் அனைத்து எம்.பிகளுக்கும் பாதுகாப்பு வழங்க ஒப்புதல்!

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கையில் பாதுகாப்பு கோரும் அனைத்து எம்.பி.க்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு ஐ.ஜி.பி மற்றும் சபாநாயகர் ஒப்புக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஜகத் விதானகே தெரிவித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளின் பேரில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க இன்று (31) நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் ஐ.ஜி.பி பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டார். இதன்போது  எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றதாக தெரியவருகிறது. விவாதங்களை தொடர்ந்து ​​பாதுகாப்பு கோரும் எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்க ஐ.ஜி.பி மற்றும் சபாநாயகர் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!