உலகம்

ஈரான் மற்றும் கட்டார் இடையேயான விமான சேவைகள் இடை நிறுத்தம்

  • February 27, 2026
  • 0 Comments

கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் ஈரானுக்கான தனது சில விமான சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தும் காலத்தை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளது. புதிய கால அட்டவணையின்படி, மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை கட்டார் தலைநகருக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில் ஈரானுக்கான மற்ற அனைத்து Qatar Airways விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என […]

உலகம்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் ஆரம்பம்!

  • February 27, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் மீது பாகிஸ்தான் போர் தொடுப்பதாக வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் நேற்று இரவில் அதிகரித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கமைய பாகிஸ்தான் படைகள் காபூல் (Kabul), காந்தஹார் (Kandahar) மற்றும் பாக்டியா (Paktia) மாகாணங்களில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானின்  வான்வழித் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களை தலிபான்கள் முன்னெடுத்திருந்த நிலையில், போர் பதற்றம் அதிகரித்துள்ளது. காபூலில் வெடி சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் மேலே பறந்ததைக் […]

இந்தியா செய்தி

இந்தியா, இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • February 27, 2026
  • 0 Comments

இந்தியா India மற்றும் இஸ்ரேல் Israel ஆகிய நாடுகளுக்கிடையில் 17 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரு நாடுகளினதும் பிரதமர்கள் முன்னிலையிலேயே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து மோடியும், நெதன்யாகுவும் இரு தரப்பு சந்திப்பின்போது தீவிரமாக ஆராய்ந்தனர். அதன்பின்னரே வேளாண்மை தொழில் நுட்பங்கள், செயற்கைக் கோள் தரவுகள், யுபிஐ பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேவேளை, இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து, இந்தியா வருமாறு பிரதமர் […]

இலங்கை செய்தி

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் பலி: மேலும் இருவர் காயம்!

  • February 27, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி கிராம பகுதிக்குள் இன்று (27) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை, மக்கள் குடியுருப்பு பகுதிக்கு சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. யானை தாக்கியதில் 75 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கின்றன. எனவே, தமது […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்: நீதி அமைச்சிடம் மகஜர் கையளிப்பு!

  • February 27, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது.” இவ்வாறுவலியுறுத்தி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் , பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, […]

உலகம்

ஒப்பந்தம் இன்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை : ஈரானின் கோரிக்கைக்கு செவிசாய்க்குமா அமெரிக்கா!

  • February 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வித ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமானின் மத்தியஸ்தத்தில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை  நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும்,  எவ்வித ஒப்பந்தமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அடுத்த சுற்று பேச்சவார்த்தைகள் அடுத்த வாரம் வியன்னாவில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன்போது அணுசக்தி தகராறைத் தீர்ப்பது மற்றும் சாத்தியமான அமெரிக்க தாக்குதல்களைத் தவிர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப அளவிலான முன்னேற்றம் தொடர்பில் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபை முறைமை நீக்கப்படாது: டில்வின் சில்வா உறுதி!

  • February 27, 2026
  • 0 Comments

“மாகாண சபைகள் இருக்க வேண்டும். மாற்று தீர்வைக் கண்டுபிடிக்காமல் அவற்றை நாம் அகற்றமாட்டோம்.” – என்று ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva தெரிவித்தார். தமது இந்திய பயணம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆங்கில நாளிதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ இனப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு சரியான தீர்வை உருவாக்க வேண்டும் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தோம். மாகாண சபைகள் அந்த நோக்கத்திற்கு உதவவில்லை. சிறந்த தீர்வை […]

ஐரோப்பா

எப்ஸ்டீன் விவகாரம் : ஹிலாரி கிளிண்டனிடம் முன்னெடுக்கப்பட இருந்த விசாரணை இடைநிறுத்தம்!

  • February 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் (Hillary Clinton) ஜெஃப்ரி எப்ஸ்டீன் ( Jeffrey Epstein) தொடர்பான வழக்கு தொடர்பில் நேற்று மூடிய கதவுகளுக்கு பின்னால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறித்த வழக்கு விசாரணை இடைநிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மூடிய கதவுகளுக்கு பின்னால் இடம்பெறும் விசாரணைகளை புகைப்படம் எடுக்கவோ, அதனை பகிர்ந்துகொள்ளவோ விசாரணைக் குழு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய விசாரணையின்போது மூடிய கதவுகளுக்கு பின்னால் கிளின்டன் இருக்கும் புகைப்படம் எக்ஸ் பக்கத்தில் […]

இந்தியா தமிழ்நாடு

தமிழக அரசியலில் பரபரப்பு: ஓ.பி.எஸ். தி.மு.கவுடன் சங்கமம்!

  • February 27, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முன்னாள் முதல்வாரன அ.தி.மு.கவின் AIADMK மிக முக்கிய தூணாக விளங்கிய ஓ.பன்னீர்செல்வம், O. Panneerselvam தி.மு.கவில் DMK இணைந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் Stalin முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் இன்று சங்கமமானார். தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 ஆம் […]

இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

  • February 27, 2026
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் (Rinku Singh) தந்தை Khachandra Singh இன்று(27) காலமானார். கல்லீரல் புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ICC 2026 T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இருந்த Rinku Singh, தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தனது குடும்பத்தினருடன் இருப்பதற்காக இந்த வார தொடக்கத்தில் அணியிலிருந்து வெளியேறிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!