இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா
“இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
அசாமின் நிலத்தை அம்பானி, அதானி மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரிடம் அவர் ஒப்படைத்துவிட்டார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் பிஸ்வநாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “உங்கள் முதல்வர் 24 மணி நேரமும் அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசிக்கொண்டிருக்கிறார் என கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உயிரிழந்த பாடகர் ஜுபீன் கார்க் தனது வாழ்நாள் முழுவதையும் அசாமிற்காக அர்ப்பணித்துள்ளார்.
அவர் யாரிடமும் ஒருபோதும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை.
உங்கள் முக்கியத் தலைவர்கள் அசாமைப் பிளவுபடுத்த ஒருபோதும் முயன்றதில்லை அவர்கள் வெறுப்பைப் பரப்ப ஒருபோதும் முயன்றதில்லை.
ஆனால், உங்கள் முதல்வர் தொடர்ந்து மாநிலத்தைப் பிளவுபடுத்தவும் வெறுப்பைப் பரப்பவும் முயற்சிக்கிறார். அவர் அபத்தமான கருத்துக்களைக் கூறுகிறார். அவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் என்பதால் இதைச் செய்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் சிங்கங்கள் அவரைச் சிறையில் தள்ளுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
ஹிமந்த சர்மா இறுதியில் அசாம் மக்களிடமும், காங்கிரஸ் தலைவர்களிடமும் மன்னிப்புக் கேட்கும் சூழல் வரும். நேரம் வரும்போது மக்கள் அவரை விட்டுவைக்க மாட்டார்கள்” என்றார்.





