விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இமயமலை படங்கள் – டுவிட்டரில் பகிர்ந்த விண்வெளி வீரர்
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இமயமலையின் படங்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, என்பவர் இந்த படங்களை பகிர்ந்துள்ளார்.
.அந்த விண்வெளி வீரர் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) ஆறு மாத விண்வெளி பயணமாக சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்த வீரர் தனது X தள பக்கத்தில் அழகான இரண்டு இமயமலை புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, “விண்வெளியில் இருந்து இமயமலை… எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம், பூமியில் கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த புள்ளி, இந்த மலைகள் நமது கிரகத்தின் வளமான இயற்கையின் அடையாளங்களில் ஒன்றாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரண்டு புகைப்படங்களில், மேகங்கள் மீது மலைகள் இருப்பது தெரிகிறது.
The Himalayas from space 🏔️
Home to the Everest summit, the highest point above sea level on earth, these mountains are one of the iconic landmarks of our planet's rich nature. pic.twitter.com/DiQqz0L95b
— Sultan AlNeyadi (@Astro_Alneyadi) August 12, 2023