பாகிஸ்தானில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து – 16 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் எரிவாயு சிலிண்டர் இன்று வெடித்து சிதறியதில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி முழுமையாக இடிந்து விழுந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதத்தின் முதல் நாளில் குடியிருப்பாளர்கள் உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி (Asif Ali Zardari) உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அத்துதுடன் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
மேலும் எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பு குறித்த சோதனைகளை அமல்படுத்தவும் ஜனாதிபதி சர்தாரி அழைப்பு விடுத்துள்ளார்.





