ஐரோப்பா

பிரான்ஸ் பிரஜைக்கு சீனாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில், 62 வயதான பிரெஞ்சு குடிமகன் சான் தாவோ ஃபூமியை சீனா தூக்கிலிட்டுள்ளதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

2010-ல் சீன நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஃபூமி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், தற்போது தூக்கிலிடப்பட்டுள்ளார்.

இறுதி நீதிமன்ற விசாரணையை ஃபூமியின் தரப்பு வழக்கறிஞர்கள் அணுக அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்த பிரஞ்சு வெளியுறவு அமைச்சகம்  ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இருப்பினும்  அனைத்து பிரதிவாதிகளையும் சமமாக நடத்துவதாகவும், வழக்குகளை பாரபட்சமின்றியும் சட்டப்படியும் கடுமையாகக் கையாள்வதாகவும் சீன தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இதேவேளை 1981-ல் மரண தண்டனையை ஒழித்த பிரான்ஸ், அதன் பயன்பாட்டிற்கு எதிராக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!