தென் அமெரிக்கா

பிளாஸ்டிக் சர்ஜரியால் பிரபல அர்ஜெண்டினா நடிகை உயிரிழப்பு!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா(43). தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், மாடலாகவும் இருந்து வந்த சில்வினா லூனா, கடந்த 2011ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட நிலையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் வாரத்திற்கு சுமார் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனிடையே சில்வினாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சில்வினாவின் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்பட்ட பக்க விளைவுகள் காரணமாகவே அவருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த அனிபால் லாடாக்கி என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்படும் பக்க விளைவுகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது. இருப்பினும் பிரபலங்கள் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பின்னர், அதன் பக்க விளைவுகளால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த