X தளத்திலிருந்து விலகும் உலக பிரபல செய்தி நிறுவனங்கள் – அதிர்ச்சியில் எலோன் மஸ்க்
உலக பிரபலமான பல செய்தி நிறுவனங்கள் X சமூக ஊடகத் தளத்தைப் பயன்படுத்துவதை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிமையாளர் எலோன் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் தவறான தகவல்கள் பரப்புவதைத் தளம் அனுமதிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் செய்தி நிறுவனங்கள் கைவிட்டுள்ளது.
சுவீடனின் Dagens Nyheter நாளேடு, X தளத்தில் தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியிருக்கும் மூன்றாவது செய்தி ஊடகமாகும்.
இலோன் மஸ்க் தளத்தை நிர்வகிக்கத் தொடங்கிய பின் தளத்தின் கொள்கைகள், திரு டோனல்ட் டிரம்ப்பின் அரசியல் கொள்கைகளுடன் இணைந்துவிட்டதாக Dagens Nyheter நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் கூறினார்.
பிரிட்டனின் The Guardian நாளேடு, ஸ்பெயினின் Vanguardia நாளேடு ஆகியவை இதற்கு முன் X தளத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தன.
வரும் நாள்களில் மேலும் பல செய்தி நிறுவனங்கள் X தளத்திலிருந்து விலகுவது குறித்துத் தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.