மத்திய கிழக்கு

எகிப்தில் லொரியின் பின்னால் மோதிய பஸ் – 14 பேர் பலி

எகிப்து நாட்டின் எல் வாடி எல் ஹிடிட் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு தலைநகர் கெய்ரோ நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இரவு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் முன்னே மெதுவாக சென்ற லொரி மீது பஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.