ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற படகு விபத்து – 71 பேர் மாயம்!
லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு ஒன்று இன்று விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், ஏறக்குறைய 71 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் இத்தாலியத் தீவான லம்பெடுசாவிற்குக் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக கேள்விகளுக்கு இத்தாலிய கடலோர காவல்படை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




