உலகம்

நியூயார்கை தாக்கும் பனிப்புயல் : மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவின் நியூயார்க் (New York) நகரில் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த எச்சரிக்கையானது நாளை காலை 6 மணி முதல் திங்கள் மாலை 6 மணிவரை செல்லுப்படியாகும் என அந்நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani)  தெரிவித்துள்ளார்.

குறைந்தது 13 முதல் 18 அங்குல பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாகவும், சில இடங்களில் அதிகமாக பனி பெய்ய வாய்ப்புள்ளது என்றும்  மேயர் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் விளைவாக இந்த புயல் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூயார்க் நகரத்திற்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!