தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஆஸ்திரேலிய பிரதமர்!
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese’) தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
கான்பெராவில் உள்ள அல்பானீஸின் இல்லத்தில் தற்போது உள்ளூர் அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமையான பாதுகாப்பு சோதனை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சமூகத்திற்கோ அல்லது பொதுப் பாதுகாப்புக்கோ தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், பிரதமரை வெளியேற்றுவது அதிகாரிகளின் “குறிப்பிடத்தக்க நடவடிக்கை” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அல்பானீஸ் சமீபத்தில் கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார்.
அதேபோல் அரசியல்வாதிகளுக்கு எதிரான துன்புறுத்தல், தொல்லை, தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் கருத்துக்கள் தொடர்பில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில், சுமார் 1009 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் இடம்பெற்ற செனட் சபை கூட்டமொன்றில், வன்முறை குற்றவாளிகள் அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களை குறிவைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





