ஆஸ்திரேலியா

ட்ரம்பின் வரிப்போருக்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதியால் US President விதிக்கப்பட்டுள்ள புதிய 15 சதவீத வரிக்கு ஆஸ்திரேலியா Australia கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

மேற்படி வரிப்போரால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்பு தொடர்பிலும், அதனை தடுப்பதற்குரிய வழிமுறைகள் குறித்தும் ஆஸ்திரேலியா ஆராய்ந்துவருகின்றது.

நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா வர்த்தகத்துறை அமைச்சர் Australian Trade Minister தெரிவித்தார்.

இது தொடர்பில் அமெரிக்காவிலுள்ள தமது நாட்டு தூதரகம் ஊடாக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத புதிய வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் பழைய வரி விதிப்பை ரத்து செய்த சில மணி நேரங்களிலேயே, ட்ரம்ப் சட்ட ரீதியான மாற்று வழிகளைப் பயன்படுத்தி இந்த வரி உயர்வை மீண்டும் அமுல்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த வரி விதிப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்றும், இது நுகர்வோரைப் பாதிக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

எனினும், ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள் மீதான நேரடி தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று சில பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!