ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய ஆலை மீது தாக்குதல்!
ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலையான சவுத் பார்ஸ் (South Pars) மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை மீதான “சக்திவாய்ந்த தாக்குதலை” இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அசலூயே வளாகத்தைச் சுற்றி பல வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம், மார்ச் மாதம் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





