ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
கடந்த வார போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும் ஆஷஸ் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னி(Sydney) மைதானத்தில் அடுத்த வருடம் 4ம் திகதி நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர்(Jofra Archer), மார்க் வுட்(Mark Wood) காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன்(Gus Atkinson) காயம் காரணமாக விலகி உள்ளார்.





