காசா பகுதியை இராணுவமயமற்றதாக்குவதற்கான ஒப்பந்தம் – ஹமாஸுக்கு எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதி வாரியம், காசா பகுதியை இராணுவமயமற்றதாக்குவதற்கான ஒப்பந்தத்தை இந்த வார இறுதிக்குள் ஹமாஸ் இறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த நான்கு தூதர்களை மேற்கோள் காட்டி மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி வலியுறுத்தலானது பாலஸ்தீனியப் போராளிக் குழுவான ஹமாஸ் தனது அதிகாரத்தைக் கைவிடுவதற்கான அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.
காசாவில் ஆறு மாதங்களாக நீடித்து வரும் போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட சர்வதேச அமைப்பான அமைதி வாரியத்தின் கோரிக்கையின்படி, ஹமாஸ் தனது கிட்டத்தட்ட அனைத்து ஆயுதங்களையும் இறுதியில் கைவிடவும், அதன் நிலத்தடி சுரங்கப்பாதை வலையமைப்பின் வரைபடங்களைப் பகிரவும் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





