இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் அமெரிக்க கடற்படை கட்டளைத் தளபதி!

அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் Admiral Steve Koehler மூன்று நாட்கள் பயணமாக இன்று (19) இலங்கை வந்தார்.

21 ஆம் திகதிவரை நாட்டில் தங்கி இருக்கும் அவர் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன், பேச்சுக்களை நடத்துவார் என அமெரிக்க தூதுரகம் தெரிவித்துள்ளது.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறுதித்தன்மையில் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பன பற்றியே அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பயணம், உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களில் இலங்கையின் இருப்பிடத்துக்கு அமெரிக்கா அளிக்கும் மூலோபாய முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணம் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!