பொழுதுபோக்கு

தனுசுக்கு ஐஸ் வைக்கும் நடிகை!

தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் ஆகியோர் தொடர்பில் கிசு கிசுக்கள் காட்டுத் தீ போல் பரவிவரும் நிலையில், அதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல தகவல் வெளிவந்துள்ளது.

“தனுஷ் சார் ஒரு கலைக்கூடம்.” என்று நடிகை மிருணாள் தாகூர் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

தனுஷ், மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கின்றனர், விரைவில் கரம்பிடிக்கவுள்ளனர் என்று இணையத்தில் கடந்த சில மாதங்களாகே தகவல்கள் பகிரப்பட்டுவந்தன.

இதற்கு மிருணாள் தாகூர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர் இந்த விவகாரம் தொடர்பில் மௌனம் காத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது இந்திப் படமொன்றின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் மிருணாள் தாகூர். கலந்து கொண்டார்.

அவரிடம் தனுஷ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிருணாள் தாகூர்,

“தேரே இஸ்க் மெயின்” இந்திப் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் சார் இருக்கும் போது, அவரை ‘சன் ஆஃப் சர்தார் 2’ ப்ரீமியர் காட்சிக்கு வருமாறு கேட்டேன்.

அவர் வருவார் என்று நினைக்கவில்லை. ஆனால், அவர் வந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

தனுஷ் சாரின் ‘மாரி’, ’ராயன்’, ‘ராஞ்சனா’, ’கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட படங்களை பார்த்த பின்பு அவருடைய ரசிகையாகவே மாறிவிட்டேன்.

அவரது ‘அசுரன்’ படத்தை பலமுறை பார்த்துள்ளேன். தனுஷ் சார் ஒரு கலைக்கூடம் போன்றவர்.

ஒரு நடிகராக அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர்.

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!