இலங்கையில் அப்சீலிங் சாகச விளையாட்டு ஆரம்பம்!
இலங்கையில் முதன்முதலில் அப்சீலிங் சாகச விளையாட்டை கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ கம்பனி (பிரைவேட்) லிமிடெட் ஆரம்பித்துள்ளது.
அப்சீலிங் சாகச விளையாட்டில் பொதுமக்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்பு டிசம்பர் மாத இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரிமாத தொடக்கத்தில் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் சாகச விளையாட்டில் ஈடுபட தாமரை கோபுரத்திற்கு வருகை தருமாறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தாமரை கோபுரத்திலிருந்து 195 மீற்றர் ஏறி இறங்கும் சாகசத்தில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது.
மருத்துவரின் சான்றளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் சாகசத்தை நிகழ்த்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)





