Site icon Tamil News

இலங்கையில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் எனற 25 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறியொன்றும் கற்பிட்டி பள்ளிவாசல்துறை கண்டல்குடா பாலத்திற்கு அருகே மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version