ஆசியா

தலிபான் அரசு விதித்துள்ள புதிய தடை; அதிர்ச்சியில் பெண்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருவதுடன் அங்கு கடுமையான பழமைவாத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது .

இதற்காக உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில் அழகு சாதன நிலையங்களை நடத்துவதற்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான் அரசின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அமைச்சர் முகமது அக்கிப் மஹ்ஜர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அழகு கலை கலைஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த சட்டம் தற்போது கிராமப்புறங்களில் மட்டுமல்லாது காபூல் போன்ற பெரிய நகரங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தலிபான் அரசாங்கத்தின் இந்த சட்டம் தொடர்பில் அழகு கலை நிபுணர் ஒருவர், ஆண்கள் வேலை இருந்தாலும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள்.இந்நிலையில் எங்களையும் வேலை செய்யவிடாமல் இது போன்ற சட்டங்களை இயற்றினால் பசியால் சாகவேண்டும் என விரக்தியுடன் தெரிவித்து இருக்கிறார்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்