பொழுதுபோக்கு

சர்ச்சையை ஏற்படுத்தியது விஜய்யின் அறிக்கை… ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்த பிரபலம்

கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் விரைவில் அரசியலிலும் அறிமுகமாகவுள்ளார். சினிமாவை போல அரசியலிலும் விஜய் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் விஜய்க்கு பிரபலங்கள் தவிர்த்து பொதுமக்கள், மாணவர்கள், ரசிகர்கள் என பல தரப்பில் இருந்தும் விஜய்க்கு கணிசமான ஆதரவு கிடைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் விஜய்.

அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

விஜய்யின் இந்த நன்றி அறிக்கை பலரது கவனத்தை ஈர்த்தது. முக்கியமாக நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் என குறிப்பிட்டிருந்ததும் விவாதத்துக்கு உரியதாக மாறியது.

இந்நிலையில் விஜய்யின் அறிக்கை குறித்து வலைப்பேச்சு பிஸ்மி விமர்சனம் செய்துள்ளார். அதில், “தம்பி விஜய் கவனத்திற்கு, அறிக்கை அல்லது கடிதம் அனுப்பும் போது அதில் தேதியை குறிப்பிடணும்” என ட்வீட் செய்துள்ளார்.

அதாவது விஜய் தனது அறிக்கையில் தேதியே குறிப்பிடவில்லை. இதனை சுட்டிக் காட்டும் விதமாக விஜய்க்கு ஸ்பெஷல் க்ளாஸ் எடுத்துள்ளார் வலைப்பேச்சு பிஸ்மி.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!