சீனாவின் தொடர்ச்சியான அத்துமீறல்களுக்கு எதிர்வினையாற்ற தயாராகும் தைவான்!
தைவானை சூழவுள்ள கடல் மற்றும் வான் பரப்புகளில் சீனாவின் அத்துமீறும் செயற்பாடு அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக தைவானில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் அல்லது இராஜதந்திர செயல்முறை இருக்கும் போது, சீனாவின் நடவடிக்கை அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஆனால், சீனாவுடன் இணையப்போவதில்லை என உறுதிமொழி எடுத்த தைவானின் ஆளும் கட்சி, கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று, மிகப்பெரிய சீனாவையும் எதிர்கொள்ளும் வகையில், தங்கள் நாட்டில் ராணுவ பலத்தை உருவாக்குவதே நோக்கம் என சூளுரைத்துள்ளது.
அதற்கான நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தைவான், உலகின் முன்னணி கணினி சிப் அல்லது செமிகண்டக்டர் தயாரிப்பாளராகக் கருதப்படுகிறது.
தைவான் அருகே கடலில் தனது போர்க்கப்பல்கள் பயணிப்பதாகவும், சீன போர் விமானங்கள் தைவானின் விமானநிலையத்தை நெருங்கி வருவதாகவும் சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் தைவான் எதிர்வினையாற்றவில்லை.
ஆனால் மேற்கத்திய ராணுவ ஆயுதங்களை ஏந்திய தைவான் இன்று தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடலுக்கு அடியில் பயணிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து தாக்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானம் சப்-ஹண்டர் அல்லது சப்மரைன் ஹண்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
தைவானிடம் அமெரிக்க லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த P-3C Orion (P.3C Orion) வகையிலான 12 விமானங்கள் உள்ளன.
மேலும், அமெரிக்கா 06 E-2K HAWKEYE (E-T.K. Hawk Eye) வகை உளவு விமானங்களை தைவானுக்கு வழங்கியதுடன், அதில் ஒன்று பயிற்சியில் இணைந்துள்ளது.
கடலுக்கு அடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை வானில் இருந்து அவதானித்து தாக்குதல் பணிகளை மேற்கொள்ளும் இந்த விமானங்கள், தரையிலுள்ள ரேடார் அமைப்புகளைத் தவிர்த்து தாழ்வாகப் பறக்கும் திறனும் பெற்றுள்ளன.
இதேவேளை, தைவானைச் சுற்றியுள்ள வான்வெளியில் சீன இராணுவத்தின் 9 விமானங்கள் பறப்பதை அவதானித்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கு பதிலடியாக தைவான் விமானம் மற்றும் கடற்படை கப்பல்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
முதற்கட்டத் தயாரிப்பாக வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்துள்ளது.