அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை : விவசாய அமைச்சர்
தேவையான அளவு அரிசியை நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில், நாட்டிற்குள் அதிகளவு அரிசியை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“2022 ஆம் ஆண்டில், நாட்டின் அரிசி தேவையில் மூன்றில் ஒரு பங்கு இறக்குமதி செய்யப்பட்டது. நாட்டிற்குத் தேவையான அரிசியின் அளவு தற்போது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 7 times, 1 visits today)