மேலும் அதிகமானோரை நீக்க தயாராகும் Google
Google நிறுவனத்தல் மேலும் அதிகமானோர் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
நிறுவனத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி சில பகுதிகளில் வேகத்தைக் கூட்ட இந்த ஆண்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் திரு பிச்சை கூறினார்.
ஆனால் அது சென்ற ஆண்டு (2023) செய்யப்பட்ட பணிநீக்கத்தின் அளவைப்போல் இருக்காது என பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
பணிநீக்கத்தால் அனைத்துக் குழுக்களும் பாதிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Google நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை செய்தி நிறுவனத்திடம் உறுதிசெய்தார்.
இந்த ஆண்டு பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பணிநீக்க அறிவிப்புகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)