ஐரோப்பா

ரஷ்ய அணுசக்தி கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து…

ரஷ்யாவின் முர்மான்ஸ்க் பகுதியில் உள்ள துறைமுகத்தில், அணுசக்தி மூலம் இயக்கப்படும் சேவ்மோர்புட் சரக்கு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலின் கேபின் பகுதியில் தீப்பிடித்தது. இதனால் கப்பலில் இருந்த ஊழியர்கள் பீதி அடைந்தனர்.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தினால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கப்பலின் அணு உலைக்கும் பாதிப்பு இல்லை.

கேபினில் சுமார் 300 சதுர அடி வரை தீ பரவியதாகவும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாகவும் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

260 மீட்டர் நீளம் கொண்ட இந்த சேவ்மோர்புட் கப்பல், ரஷ்யாவில் பயன்பாட்டில் இருக்கும் ஒரே அணுசக்தி சரக்கு கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்