அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் கசிவு : பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்தியது அமெரிக்கா!
அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் கசிவு : பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்தியது அமெரிக்கா!
உக்ரைன் போர் திட்டம் பற்றிய அமெரிக்க ரகசிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
ரஷ்யாவிற்கு எதிரான வசந்தகால தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்க மற்றும் நேட்டோ திட்டங்களின் விவரங்களே இவ்வாறு கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த இரகசிய ஆவணங்கள் கசிந்தமைக்கு பின்னால், ரஷ்யா அல்லது ரஷ்யா சார்பு நபர்கள் இருந்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யப் படைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆவணங்கள் மாற்றப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த விடயத்தை மதிப்பாய்வு செய்து வருவதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)