இலங்கை

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.

குறித்த வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (11.12.2023) குறித்த வழக்கு இடம்பெற்ற போது நீதிமன்றிற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று விவாதங்கள் நடைபெற்று 29 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2024 அன்று வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது , குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்தவருடம் 2022.09.21 குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அவ் ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார், பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். இந் நிலையில் பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்