உலகம்

X தளத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள்

10 மில்லியனுக்கும் அதிகமானோர் X எனப்படும் Twitter சமூக வலைத்தளத்தில் இணைந்திருப்பதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரீனோ தெரிவித்துள்ளார்.

இந்த டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் இவர்கள் இணைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சில முன்னணி நிறுவனங்கள் இந்தத் தளத்தில் விளம்பரம் செய்வதை இந்த ஆண்டு (2023) இறுதியோடு நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்தன.

அதனால் நிறுவனத்துக்கு 75 மில்லியன் டொலர் வரை விளம்பர வருவாய் இழப்பு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

அதனைச் சரிசெய்ய நிறுவனம் பல முயற்சிகளை எடுத்துவந்த நிலையில் புதிய பயனீட்டாளர்களின் எண்ணிக்கை குறித்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் சராசரியுடன் ஒப்பிடும்போது அந்த எண்ணிக்கை எவ்வளவு அதிகம் என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை.

X தளம் 540 மில்லியன் மாதாந்திரப் பயனீட்டாளர்களைக் கொண்டுள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் இலோன் மஸ்க் ஜூலை மாதம் கூறியிருந்தார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்