உலகம்

டெக்சாஸில் கருகலைப்பு செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்!

டெக்சாஸின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஒரு பெண்ணின் அவசர கருக்கலைப்பை தற்காலிகமாக தடைசெய்துள்ளது.

குறித்த பெண்ணின் கரு சாத்தியமானதாக இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது  மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் இருவரும் எதிர்கொள்ளும் சட்டரீதியான ஆபத்துகளை அடிக்கோடிட்டுக் காட்டியது.

31 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான கேட் காக்ஸ், உயிருக்கு ஆபத்தானநிலையில் தற்போது உள்ள கருவை கலைக்கலாம் என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவருடைய கர்ப்பத்தை கலைப்பதை தடுக்கும் வகையில் உச்ச  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த பெண்ணின் கருவை கலைக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

டெக்சாஸில் நாட்டில் கடுமையான கருக்கலைப்புச் சட்டங்கள் உள்ளன. இந்நிலையில் 20 வார கர்ப்பமாக இருக்கும் காக்ஸ், டெக்சாஸ் சட்டத்தின் மருத்துவ விதிவிலக்கு விதியின் கீழ் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நீதிபதி மாயா குவேரா கேம்பிள் தீர்ப்பளித்தார்.

ஆனால் அவருடைய தீர்ப்பை  கன்சர்வேடிவ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாக்ஸ்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.  நீதிபதியின் உத்தரவு “டெக்சாஸின் கருக்கலைப்பு சட்டங்களை மீறும் சிவில் மற்றும் கிரிமினல் பொறுப்பிலிருந்து மருத்துவமனைகள், மருத்துவர்கள் அல்லது வேறு யாரையும் தனிமைப்படுத்தாது” என்று கூறினார்.

 

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!