இலங்கையில் நீரில் மூழ்கி குழந்தை உள்பட நபர் ஒருவர் உயிரிழப்பு!

மதுரங்குளிய மற்றும் அரலகங்வில பிரதேசத்தில் சிறு குழந்தை உட்பட நபர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரங்குளிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்பாக உள்ள கால்வாயில் தவறி விழுந்த 01 வயதும் 02 மாதமும் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரலகங்வில 05 அஞ்சல் பகுதியில் Z.D கால்வாயில் வீழ்ந்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெதகம தேவகல பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 23 times, 1 visits today)