சீனிக்கான சில்லறை விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி!

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிரவுன் மற்றும் வெள்ளை சர்க்கரை விலைகள் இன்று (03) முதல் நடைக்குறைக்கு வரவுள்ளன.
பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனிக்கு 295 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதி செய்யப்படாத ஒரு கிலோ சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)