சைபர் பாதுகாப்பு சட்டத்தை இவ்வருடத்திலேயே நடைமுறைப்படுத்த வாய்ப்பு!
சைபர் பாதுகாப்புச் சட்டத்தை இவ்வருடத்தில் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின் மதிப்பாய்வுக்கு உட்பட்டு இந்த மசோதா சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறினார்.
கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் கனக ஹேரத் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
(Visited 3 times, 1 visits today)