இலங்கை செய்தி

கிளிநொச்சியில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன்12 ஏக்கர் பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய இரண்டு மாணவிகள் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் தம்மால் இந்த பூமியில் வாழ முடியாது என தெரிவித்து தமது இறப்புக்கு காரணம் தாங்களே என கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர்.

இருவரும் அதில் கையொப்பம் இட்ட நிலையில் குறித்த கடிதம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுமிகளும் தற்பொழுது க.பொ.த சாதாரணப் பரீச்சைக்கு தோற்றி பெறுபேறுக்காக காத்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை