ஐரோப்பா

பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்

பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அதிகூடிய அளவில் கருக்கலைப்பு (IVG) எண்ணிக்கை கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கருக்கலைப்பு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பிரான்சில் 234,300 எண்ணிக்கையிலான கருக்கலைப்புக்கள் பதிவாகியுள்ளன. 1990 ஆம் ஆண்டின் பின்னர் இந்த அதிகூடிய எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

விதிவிலக்கான 2019 ஆம் ஆண்டு (கொவிட் 19 பரவல்) ஆண்டு அதிகளவான கருக்கலைப்புக்கள் பிரான்சில் பதிவாகியிருந்தது.

அந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு 7,000 கருக்கலைப்புக்கள் அதிகமாகும். நாள் ஒன்றுக்கு 16 வீதம் இந்த கருக்கலைப்புக்கள் பதிவாகியள்ளது.

அதேவேளை, கருக்கலைப்பு செய்யும் பெண்களின் வயது எல்லை 15 இல் இருந்து ஆரம்பமாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்