புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி வெளியிடு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ரயில் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
“இன்று நள்ளிரவு 12 மணி முதல் ரயில் சேவையை பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறும், நாளை முதல் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்குமாறும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்திருந்தார்.
எந்த வேலைநிறுத்தத்திலும் பங்கேற்காமல் தங்கள் கடமைகளை சரியாக நிறைவேற்றிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் 18,000 ஊழியர்கள் சார்பாகவும் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்” என்றார்.
அதற்கமைய இவ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)