இந்தியா

மனைவியின் உடலை ஃப்ரீஸரில் வைத்திருந்த கணவர்; விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், இறந்த தன் மனைவியின் உடலை கணவர் ஃப்ரீஸரில் வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தன் மனைவியைக் கொன்றிருக்கலாம் என உயிரிழந்த அந்தப் பெண்ணின் சகோதரர் பொலிஸில் புகாரளித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த Abhay Tiwari என்பவர், தன் சகோதரியான Sumitriயை, அவரது கணவரான Bharat Mishra கொன்றுவிட்டதாக பொலிசில் புகாரளித்துள்ளார்.தன் தங்கை உயிரிழந்ததை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல், அவரது உடலை Bharat ஃப்ரீஸரில் வைத்திருந்தது தனக்கு இன்று காலை தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Bharat தன் மனைவியை அடிக்கும் வழக்கம் கொண்டவர் என்று கூறியுள்ள Abhay, அப்படி அவர் அடிக்கும்போது தன் சகோதரியான Sumitri உயிரிழந்திருக்கலாம் என்றும், அதை மறைத்து அவரது உடலை Bharat ஃப்ரீஸரில் வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

The husband who killed his wife and put the clean corpse in the freezer,  went home! | A husband killed his wife in Madhya Pradesh and put her body  in a freezer

ஆனால், தன் மனைவி வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்துவிட்டதாகவும், இறுதிச்சடங்குக்காக மும்பையில் வாழும் தன் மகன் வருவதற்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள Bharat, அவர் வருவதற்காகத்தான் தான் தன் மனைவியின் உடலை ஃப்ரீஸரில் வைத்திருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Sumitriயின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், அவர் எதனால் உயிரிழந்தார் என்பதைக் கண்டறிவதற்காக, அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ளார்கள்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே