உலகம் செய்தி

பயங்கரவாதத் தாக்குதலா? விசாரணை வேட்டை தீவிரம்!

லண்டன் Golders Green பகுதியில் யூதர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத சம்பவமா என பொலிஸார் விசாரணை வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

தாக்குதலை நடத்திய 45 வயது சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இரு ஆண்கள் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

30 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் எனவும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தாக்குதல் நடத்தியவரின் பின்னணி மற்றும் நோக்கம் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

மேற்படி தாக்குதல் சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!