உலகம் செய்தி

லண்டனில் பயங்கரம்: யூதர்கள்மீது கத்திக்குத்து தாக்குதல்!!

வடக்கு லண்டனில் யூத சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் யூத எதிர்ப்பு வன்முறைச்சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சூழலிலேயே இத்தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல்களின் பின்னணியில் ஈரானியத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

மேற்படி தாக்குதல் சம்பவத்தை பிரிட்டன் பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது பற்றி தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!