ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஸ்டாமருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த எம்.பிகள் : பிரதமர் பதவி பறிபோக வாய்ப்பு!

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டாமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினாரா என்பது தொடர்பில் விசாரணையை தொடங்குவதற்கு ஏதுவாக  15 தொழிற்கட்சி எம்.பிகள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

லார்ட் மாண்டல்சன்  (Lord Mandelson) அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்கப்பட்டது தொடர்பாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள  நிலையில் இந்த வாக்களிப்பு வந்துள்ளது.

223க்கு 335 என்ற வாக்கு வித்தியாசத்தில் வாக்களிக்கப்பட்ட  அதேநேரம் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர்.

இரு எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், லார்ட் மாண்டல்சனின் நியமனம் தொடர்பாக ஸ்டாமர் சபையைத் தவறாக வழிநடத்தினாரா என்பது குறித்து சிறப்புரிமைக் குழு விசாரணை நடத்தக் கோரி,  சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோயிலுக்குக் (Sir Lindsay Hoyl) கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த சிறப்புரிமைக் குழுதான்,  முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson)   ‘பார்ட்டிகேட்’  (partygate) குறித்த விசாரணையை நடத்தியிருந்தது.  அதுவே அவரது பதவிக்காலத்தை முடிவுக்கு கொண்டுவரவும் வழிவகுத்தது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!