உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நாளை நள்ளிரவுடன் நிறைவு
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை, ஏப்ரல் 24 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் இணையதளம் ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.
நாளை நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையதள அணுகல் முடக்கப்படும் என்பதுடன் எக்காரணம் கொண்டும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இறுதி நேர தொழில்நுட்ப நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டு, பரீட்சார்த்திகள் முன்னதாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்





