உக்ரைன் முழுவதும் தொடர் தாக்குதல்கள் – 17 பேர் உயிரிழப்பு!
உக்ரைன் முழுவதும் நடந்த தொடர் ரஷ்யத் தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவை உலகளாவிய அச்சுறுத்தல் என ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.
இரவு முழுவதும் நடந்த இந்தத் தாக்குதல்களால் கீவில் நான்கு பேரும், ஒடெசாவில் ஏழு பேரும், டினிப்ரோவில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர்.
மேற்படி உயிரிழப்புகளை கீவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ (Vitali Klitschko) உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் நெதர்லாந்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜெலென்ஸ்கி, புட்டினின் “விரிவாக்க லட்சியங்களையும்” நாடுகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அவரது விருப்பத்தையும் சுட்டிக்காட்டி, அவரை நாஜிக்களுடன் ஒப்பிட்டுள்ளார்.
மேலும், சிரியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பிராந்தியங்களில் ரஷ்யாவின் இராணுவ ஈடுபாடு இந்த அச்சுறுத்தலின் உலகளாவிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.





