ஆசியா

சிங்கப்பூரில் பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டவர் – காத்திருக்கும் பிரம்படி

சிங்கப்பூரில் பெண்ணிடம் தகாத சீண்டலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான வெளிநாட்டு நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். லோரோங் 18 கெய்லாங் அருகே உள்ள பட்ஜெட் ஒன் ஹோட்டலுக்கு வெளியே கடந்த ஜூன் 8ஆம் திகதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அன்று நள்ளிரவு 1:25 மணியளவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களுக்கமைய,, இதில் கைதான அந்த சந்தேக நபர் வியட்நாம் நாட்டவர் என தெரியவந்துள்ளது.

35 வயதுமிக்க பெண்ணிடம் தவறான முறையில் செயற்பட்ட அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது பிரம்படி விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!