இந்தியா செய்தி

பாகிஸ்தான் பல துண்டுகளாக உடையும்: இந்தியா பதிலடி!

தாக்குதல் எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருக்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

வங்கத்தின் மீது கண் வைக்க முயன்றால், இந்த முறை பாகிஸ்தான் எத்தனை துண்டுகளாக உடையும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் Rajnath Singh குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இனி இந்தியா ஈடுபட்டால் அதற்குப் பதிலடியாக கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் Khawaja Asif அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ,
“ பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆத்திரமூட்டும் வகையிலான இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கக் கூடாது.

55 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாகப் பிரிந்தபோது அவர்கள் அதன் விளைவுகளை அனுபவித்தனர்.

இப்போது அவர்கள் வங்கத்தின் மீது கண் வைக்க முயன்றால், இந்த முறை பாகிஸ்தான் எத்தனை துண்டுகளாக உடையும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பாகிஸ்தான் அமைச்சரின் எச்சரிக்கைக்கு பதில் அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்குத் துணிச்சல் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!