அமெரிக்காவுக்கு இராஜதந்திர தூது: ஈரான் மறுப்பு!
அமெரிக்காவுடன் தமது நாடு எவ்வித இராஜதந்திர பேச்சுகளையும் தற்போது முன்னெடுக்கவில்லை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார்.
அமெரிக்கத் தூதுவர் Steve Witkoff மூலம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என வெளிவந்த தகவல்களை அவர் அடியோடு நிராகரித்துள்ளார்.
இத்தகைய தகவல்கள் வெறும் வதந்திகள் என்றும், எண்ணெய் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் திசை திருப்பும் நோக்கில் பரப்பட்டுவருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
y Steve Witkoff உடனான தனது கடைசி உரையாடல் அமெரிக்காவின் இராணுவத் தாக்குதலுக்கு முன்னரே நிகழ்ந்ததாகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகங்களின் அறிக்கைகளை ஆதாரமற்றவை என்று சாடிய அராக்ச்சி, இரு நாடுகளுக்கும் இடையே தற்போது எந்தவொரு தூதரகப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.





