ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய ஈரான் வீராங்கனைகள் தாயகம் திரும்ப திட்டம்!
ஈரான் நாட்டு பெண்கள் கால்பந்து அணியைச் சேர்ந்த மேலும் மூன்று வீராங்கனைகள், ஆஸ்திரேலியாவில் கோரியிருந்த அரசியல் புகலிட விண்ணப்பங்களை ரத்து செய்துவிட்டு தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
அரசியல் புகலிடம் வழங்கப்பட்ட நிலையில் ஒரு வீராங்கனை தமது முடிவை மாற்றி இருந்த நிலையிலேயே தற்போது மேலும் மூவர் ஈரான் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் முடிவை ஈரான் அரசாங்கம் வரவேற்றுள்ளது. வீராங்கனைகளின் தேசியப்பற்று மற்றும் தேசபக்திக்கு கிடைத்த வெற்றியெனவும் கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தூண்டுதலின் பேரில் செயல்படுவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
புகலிடம் தொடர்பாக எழுந்த இந்த சர்வதேச அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், வீராங்கனைகளின் இந்த திடீர் முடிவு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.





