உலகம் செய்தி

ஹார்முஸில் பதற்றம் – 1,000 கப்பல்கள் வரிசையில் காத்திருப்பு

ஈரான் தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் 200 க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் உட்பட சுமார் 1,000 கப்பல்கள் தற்போது வரிசையில் காத்திருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) நிருபர் இன்சமாம் ரஷீத் (Inzamam Rashid) தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் பகுதியில் ஈரான் இராணுவத்தின் கட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அந்த நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தற்போது பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த நீரிணை வழியாக கடக்க முயலும் எந்த கப்பலும் தாக்குதலுக்கான இலக்காக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த பதற்றத்தின் விளைவாக ஹார்முஸ் நீரிணை வழியாக கடத்தப்படும் எண்ணெய் அளவு கடுமையாக குறைந்துள்ளது.

சாதாரணமாக ஒரு நாளுக்கு 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய் இந்த வழியாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!