மண்டேல்சன் சர்ச்சை மீண்டும் வெடித்தது – பதவி விலகுமாறு ஸ்டார்மருக்கு அழுத்தம்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகிறது.
முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) தொடர்பான கோப்புகள் பிரதமரின் தீர்ப்பில் பெரிய தவறு நடந்ததை காட்டு அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
“மண்டேல்சன் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் அமெரிக்க தூதுவர் நியமனத்தை வழங்கியிருக்க மாட்டேன்” என பிரதமர் கூறியதைய சுட்டிக்காட்டிய கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவர் மேட் விக்கர்ஸ் (Matt Vickers) அந்த கோப்புகளைப் பார்க்கும் போது, நியமனத்தை வழங்காமலிருக்க போதுமான தகவல்கள் பிரதமருக்கு இருந்திருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது என்றார்.
Sky News தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகரே முன்பே இதுகுறித்து எச்சரித்திருந்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
நாட்டின் மிகவும் முக்கியமான இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட நபருக்கு,பாலியல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சர்ச்சைகள் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இவ்வாறான நியமனம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் விக்கர்ஸ் வலியுறுத்தினார்.
இதனால் பிரதமர் பதவி விலக வேண்டுமா என்று கேட்கப்பட்டபோது, “ஆம், அவர் நிச்சயமாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ளது” என்று கூறினார்.





